Home புலனாய்வு செய்தி SL Army Blacksheep இராணுவத்துக்குள்ளும் கறுப்பு ஆடுகள் உள்ளன

SL Army Blacksheep இராணுவத்துக்குள்ளும் கறுப்பு ஆடுகள் உள்ளன

இரா­ணு­வத்­துக்­குள்­ளும் கறுப்பு ஆடு­கள் இருக்­கக்­கூ­டும் என்­றும், எவ­ரே­னும் கடத்­தல், கொலை உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தால் அவர்­களை மன்­னிக்­கவே கூடாது. குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை வழங்­கி­னால்­தான் நாட்­டுக்­கும், இரா­ணு­வத்­துக்­கும் நற்­பெ­யர் ஏற்­ப­டும்.

இவ்­வாறு நிதி மற்­றும் ஊட­கத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற விவா­தத்­தில் கருத்­துக் கூறு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கை­யி­டம் சிறந்த இரா­ணு­வக் கட்­ட­மைப்பு இருக்­கின்­றது என்­ப­தைச் சக­ல­ரும் நன்­க­றி­வார்­கள். என­வே­தான் ஐ.நா. அமை­திப் படை­யில் இலங்­கைக்­கும் இடம் கிடைத்­துள்­ளது. சிறந்த இலங்கை இரா­ணு­வத்­தி­லும் கறுப்பு ஆடு­கள் இருக்­க­லாம். அவ்­வா­றா­ன­வர்­க­ளைத் தண்­டிக்­கும்­போ­து­தான் ஒட்­டு­மொத்த இரா­ணு­வத்­தின் நற்­பெ­ய­ரும் பாது­காக்­கப்­ப­டும்.

யாழ்ப்­பா­ணத்­தில் கிரு­சாந்தி கொலை சம்­ப­வத்­தின் போது உரிய விசா­ரணை நடத்­திச் சம்­பந்­தப்­பட்ட படை வீர­ருக்­குத் தண்­டனை வழங்­கப்­பட்­ட­போ­து­தான் முழு இரா­ணு­வத்­தின் நற்­பெ­ய­ரும் பாது­காக்­கப்­பட்­டது என்­ப­தைக் கூறி­யா­க­வேண்­டும்.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைக் கடத்­தித் தாக்­கிய, கொலை செய்த மற்­றும் கப்­பம் பெறு­வ­தற்­காக இளை­ஞர்­க­ளைக் கடத்­திய சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் எவ­ராக இருந்­தா­லும் அவர்­களை மன்­னிக்­கக்­கூ­டாது. உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் – என்­றார்.