Home உள்ளூர் செய்தி Amparai News அம்­பாறையில் 2 பொலி­ஸா­ருக்­குத் தூக்கு

Amparai News அம்­பாறையில் 2 பொலி­ஸா­ருக்­குத் தூக்கு

தம்­ப­தி­யைத் துப்­பாக்­கிச் சூட்­டில் படு­கொலை செய்த 2 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­குத் தூக்­குத் தண்­டனை விதித்து அம்­பாறை மேல் நீதி­மன்­றம் நேற்­றுத் தீர்ப்­ப­ளித்­தது.

அம்­பாறை மத்­திய முகாம் என்ற இடத்­தில் 1997ஆம் ஆண்டு செப்ரெம்­பர் 23ஆம் திகதி கல­வ­ரம் இடம்­பெற்­றது. அதில் ஏரா­ள­மான தமி­ழர்­கள் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டி­லும் வேறு பல வழி­க­ளி­லும் கொல்­லப்­பட்­ட­னர்.

எனி­னும் தம்­ப­தி­யி­ன­ரைச் சுட்­டுக் கொன்­ற­னர் உட்­பட 47 குற்­றங்­கள் 3 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ராக மட்­டும் சுமத்­தப்­பட்டு வழக்­குத் தொட­ரப்­பட்­டது.

அம்­பாறை மேல் நீதி­மன்­றில் நீதி­பதி குமுது பிரே­மச்­சந்­திர முன்­னி­லை­யில் இந்த வழக்கு விசா­ரிக்­கப்­பட்­டது. 45 குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.

தம்­ப­தி­யி­ன­ரைத் துப்­பாக்­கிச் சூட்­டில் கொன்­றமை உள்­ளிட்ட 2 குற்­றங்­களே நிரூ­பிக்­கப்­பட்­டன. குற்­ற­வா­ளி­க­ளான 3 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளில் ஒரு­வர் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­டார். அத­னால் பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்த 2 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு நேற்று தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.