Home சினிமா இந்தியாவிலே எனது மனைவி குண்டானது தான் பெரிய பிரச்சனையா..? சரண்யா கணவர் பதிலடி!

இந்தியாவிலே எனது மனைவி குண்டானது தான் பெரிய பிரச்சனையா..? சரண்யா கணவர் பதிலடி!

நடிகை சரண்யா மோகனின் குண்டான தோற்றம் குறித்து புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதற்கு அவரது கணவன் அரவிந்த் கிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

குழந்தை பெற்றெடுத்த பின்னர் நடிகை சரண்யா மோகன் குண்டானார். எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாரே என அவரது புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.

ஒரு தாய்மையின் வேதனையை அறிந்திருந்திருப்பவர்கள் இப்படி பேசமாட்டார்கள் என நடிகை நளினி உட்பட பல தரப்பிலும் இருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், நடிகை சரண்யா மோகனும் எனது தோற்றம் முக்கியமில்லை, என்னை புரிந்துகொண்டவர்கள் என்னுடன் இருந்தால் போதும் என விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையில் சரண்யா மோகனின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் கூறியிருப்பதாவது, இந்தியாவில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கையில், எனது மனைவின் உடற்தோற்றத்தை பற்றி விமர்சிக்க வேண்டியதில்லை.

அவர் எனக்கு நல்ல மனைவியாகவும், எனது குழந்தைக்கு நல்ல தாயாகவும் இருக்கிறார். இது ஒன்றே போதுமானது என கூறியுள்ளார்.