தப்பித்தாரா ?? C.V.K !!

நடந்து முடிந்­த­தில் இனிப் பிழை கண்­டு­பி­டிப்­பதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. அவைத் தலை­வர் விட­யத்­தைச் சர்ச்­சைக்­குள்­ளாக்க முடி­யாது. அவைத் தலை­வ­ருக்கு எதி­ராக எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளான புளொட் மற்­றும் ரெலோ என்­ப­ன­வற்­றின் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

வடக்கு மாகாண சபை­யின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கைய­ளித்­த­தன் ஊடா­கப் பக்­கம் சார்ந்து செயற்­பட்­டுள்­ளார் என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று முன்­தி­னம் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த நிலை­யில், ரில்கோ விடு­தி­யில் நேற்று மாலை பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நடத்­திய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், வடக்கு மாகாண பேர­வைச் செய­ல­கம் வழமை போன்று செயற்­ப­டும். அவைத் தலை­வ­ரின் நடு­நிலை தொடர்­பான சர்ச்சை எழுப்­பப்­பட்­டா­லும் அனைத்­துப் பிரச்­சி­னை­யும் முடி­வுக்கு வந்­தி­ருப்­ப­தால் பழைய பிரச்­சி­னையை மீண்­டும் எழுப்­பாது மறப்­போம் மன்­னிப்­போம் அடிப்­ப­டை­யில் அனை­வ­ரும் செயல்­பட வேண்­டும்’ என்­றார்.

இந்த விட­யம் தொடர்­பில் புளொட் அமைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்­த­னி­டம் கேட்­ட­போது, முத­ல­மைச்­சர் மீதான நம்­பிக்­கை­யில்­லாப் பிரச்­சினை முழு­மை­யாக முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதில் பிழை பிடித்து சர்ச்­சைக்­குள்­ளாக்­கு­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. அவைத் தலை­வ­ருக்கு எதி­ராக எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கைக்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது – என்­றார்.