Home சர்வதேச செய்தி Facebook Likesக்காக குழந்தையை சித்திரவதை செய்த வாலிபன்

Facebook Likesக்காக குழந்தையை சித்திரவதை செய்த வாலிபன்

Facebook, Whatsapp, Twitter, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்கள் இன்றைய தனிமனிதனின் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது. நம் கடந்த கால நினைவுகளுக்காக முன்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை, இன்று இவ்வாறான சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிறரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காகவே புகைப்படம் எடுக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது எனலாம்.

அல்ஜீரியாவை சேர்ந்த ஒருவர் தனது Facebook பக்கத்தில் அதிக Likes வரவேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையை சித்ரவதை செய்யும் புகைப்படம் வெளியாகி மிகுதியான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வாலிபர், 15ஆவது மாடியில் இருந்து ஒரு பச்சிளம்குழந்தையை ஜன்னல் வழியே வெளியில் தொங்க விட்டு அதை புகைப்படம் எடுத்து இந்த படத்திற்கு 1000 likes வரவேண்டும் இல்லையென்றால் குழந்தையை கீழே விட்டுவிடுவேன் என பதிவிட்டுள்ளார்.

இது பலரின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. குழந்தை சித்ரவதை செய்வதால் இவரை கைது செய்ய வேண்டும் என பலராலும் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்தக் குழந்தையின் உறவின் எனவும், குழந்தையை தான் எந்த சித்ரவதையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தான் தனது அபார்ட்மென்டின் மாடியில் தகுந்த பாதுகாப்புக்கிடையே அந்தப் படத்தை எடுத்ததாகவும், ஆனால் இதை யாரோ Morph செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

அந்தக் குழந்தையின் தந்தை, வாலிபர் தெரியாமல் விளையாடியுள்ளார் என்றும் அவரை மன்னித்து வெளியில் விடுமாறும் கேட்க்கொண்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, குழந்தை சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது தெளிவாக தெரிவதாகவும் எனவே இவரை விடுவிக்கமுடியாது என கூறி தண்டனை வழங்கியுள்ளார். விளையாட்டு வினையானதால் அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

வாலிபருக்கு கிடைத்த இந்த தண்டனையை பலரும் புகழ்ந்தும், வேறு எவரும் இனி இப்படி செய்தால் தண்டனை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்றவாறும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இவர் பதிவிட்ட அந்த புகைப்படம் 1000க்கும் அதிகமான வெறுப்பு (Angry Smilie) பெற்றுள்ளது.