அமைச்­ச­ரவை கூட்­டங்­க­ளில் கைபேசி தடை

அமைச்­ச­ர­வைக் கூட்­டங்­க­ளுக் குக் கைத்­தொ­லை­பே­சி­களை எடுத்து வர வேண்­டாம் என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, அமைச்­சர்­க­ளுக்கு நேற்று அறி­வித்­துள்­ளார் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது.

இது உத்­த­ர­வில்லை. மாறாக அறி­விப்பு மாத்­தி­ரமே என­வும் அரச தலை­வர் செய­ல­கத்­தின் தக­வல்­கள் கூறு­கின்­றன.

சில அமைச்­சர்­கள், அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தின்­போது கைத்­தொ­லை­பே­சி­க­ளில் குறுந்­த­க­வல்­களை அனுப்­பும் பழக்­கத்தை கொண்­டி­ருப்­ப­தால் இந்த அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

ஆயி­னும், இதற்கு முன்­னர் ஆட்­சி­யில் இருந்த அர­சின் அமைச்­சர் ஒரு­வர் தக­வல்­களை எதிர்க்­கட்­சிக்கு வழங்­கத் தனது கைத்­தொ­லை­பே­சியை அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தின் ஆரம்­பத்­தி­லேயே செயற்­ப­ட­வைத்து வந்­த­தா­கக் கடந்த காலங்­க­ளில் தக­வல்­கள் வெளி­யாகி இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.