யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா செட்டிக்குளம் மெனிக்கபாம் காட்டுப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் தனது நண்பருடன் பாலப்பழம் பிடுங்குவதற்காக காலை மெனிக்பாம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பாலப்பழம் பிடுங்கி கொண்டிருக்கும் பொழுது திடீரென வந்த யானையால் தாக்கப்பட்டு அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் உயிழந்தவரின் உடலம் மீட்கப்பட்டது