Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் குமாரின் போலிமுகத்தை அம்பலப்படுத்தியது சுவிஸ் தூதரகம்

சுவிஸ் குமாரின் போலிமுகத்தை அம்பலப்படுத்தியது சுவிஸ் தூதரகம்

மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனப்படும் சுவிஸ் குமார் தமது நாட்டுப் பிரசை இல்லை என்ற உண்மையை இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிற்சர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் சுவிற்சர்லாந்து பிரஜை அல்ல, அங்கே தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு இலங்கையர் தான் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அத்துடன் வித்தியா கொலைச் சம்பவத்தை தமது அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு இலங்கைக்கு இது தொடர்பில் சட்ட உதவி வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம் என தூதரகத்தின் பிரதானி ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் அவர்கள் தெரிவித்துள்ளார் என அவ்வூடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.