Home சுவிஸ்லாந்து செய்திகள் 23 பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய இசை நிகழ்ச்சி

23 பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய இசை நிகழ்ச்சி

சுவீடனின் மிகப்பெரும் இசைவிழாவாக கருதப்படுகின்ற மூன்று நாள் தொடர் இசை நிகழ்வொன்றில் 23 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை அங்கு ஏற்படுத்தியுள்ளது.

கடந்த யூன் 28ம் நாள் முதல் யூலை 1ம் நாள் வரை இந்த Bravalle இசை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இம்முறை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைப்பிரியர்கள் இந்நாட்களில் ஒன்று கூடியுள்ளனர்.

வெளித்திடலில் இடம்பெறும் இந்நிகழ்வினைக் இரவு பகலாக காண்பதற்கு தற்காலிய கூடரங்களை ரசிகர்கள் அமைத்துக் கொள்வது வழமையாக உள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த இசை நிகழ்வின் போது 23 பெண்கள் இனந்தெரியாத ஆண்களினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தாண்டுக்குரிய இசைநிகழ்வினை சுவீடன் அரசு நிறுத்தியுள்ளது.

இப்பகுதியில் உள்ள குடியேற்றவாசிகள் மீது சந்தேகத்தினை திருப்பியுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.