Home மருத்துவம் சீரகத்தை இதுல கலந்து சாப்பிட்டா ஒரு மாசத்துலயே 15 கிலோ வெயிட் குறைச்சிடலாம்.

சீரகத்தை இதுல கலந்து சாப்பிட்டா ஒரு மாசத்துலயே 15 கிலோ வெயிட் குறைச்சிடலாம்.

உடல்பருமன் என்பது ஒட்டுமொத்த நாட்டையே அச்சுறுத்தும் நோயாக மாறிவிட்டது. ஏனெனில் உடல்பருமன் தான் மற்ற எல்லாவித நோய்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. அநை்த எடையைக் குறைப்பதற்கு ஜிம்முக்கு போவது, நடைப்பயிற்சி, கண்ட கண்ட மருந்துகள் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள்.

ஆனால் நம்முடைய வீட்டில் நாம் தினசரி பயன்படுத்துகிற ஒரு பொருளை முறையாக சாப்பிட்டால் தேவையில்லாத உடல்எடை கடகடவென குறைந்து போகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

நம்முடைய தினசரி உணவில் கட்டாயம் இடம்பெறும் பொருள்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகம் நம்முடைய உடல் எடையை வெகு வேகமாகக் குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

நாம் தான் தினமும் உணவில் தினமும் சேர்து்துக் கொள்கிறுாமே பிறகு ஏன் எடை குறையவில்லை என்று கேட்கலாம். ஆனால் அவற்றைச் சாப்பிடுவதற்கான ஒரு சில வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவும். சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. அதனால் மிக வேகமாக உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து போகும்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை தினமும் சாப்பிட்ட வாருங்கள். அல்லது ஒரே முறையில் பின்பற்ற கஷ்டமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சீரக தண்ணீர்

2 ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடி மற்றும் தயிர்

சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம்.

சீரகப் பொடி மற்றும் தேன்

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க முடியும்.

சூப்புடன் சீரகப் பொடி

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும்.இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் காணாமல் போகச் செய்யலாம்.