Home நிகழ்வுகள் முல்லைத்தீவு நாயாற்றில் பயிற்சி பாடசாலை! முதலாவது படைப் பிரிவு வெளியேற்றம்

முல்லைத்தீவு நாயாற்றில் பயிற்சி பாடசாலை! முதலாவது படைப் பிரிவு வெளியேற்றம்

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் சிறப்புப் படைப்பிரிவுக்காக புதிதாக சுழியோடும் பயிற்சி பாடசாலை ஒன்றை இராணுவம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பாடசாலையிலிருந்து பயிற்சி பெற்ற 38 பேரை கொண்ட முதலாவது படைப்பிரிவு வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நிகழ்வு பயிற்சிப் பாடசாலை அமைந்துள்ள நாயாறு கடலேரியை அண்மித்த சுற்றுப் புறத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது பயிற்சிகளை முடித்த படையினருக்கான பட்டிகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.