Home விளையாட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்குத் தெரிவான தமிழ் இளைஞன்..!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்குத் தெரிவான தமிழ் இளைஞன்..!

மட்டக்களப்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டதுடன் கமலநாதன் தனுசாந்த் எனும் சூழல் பந்துவீச்சாளர் கிரிக்கெட் கட்டுபாட்டுச் சபையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு தேசிய அணியின் பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்கவுள்ளதுடன் தேசிய அணியில் இணைத்து விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு இரு தமிழ் வீரர்கள் தெரிவாகியுள்ளதுடன் இவர்களில் தனுசாந்தும் ஒருவராவார்.

படுவான்கரை கொக்கடிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்விகற்று வருகின்றார்.