Home சமூக சீர்கேடு யாழில் வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா வியாபாரம் செய்த மூவர் கைது

யாழில் வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா வியாபாரம் செய்த மூவர் கைது

யாழ். சாவகச்சேரியில் வீடொன்றில் மறைத்து வைத்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட மூன்று நபர்களை 14 தினங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைப்பீட பிரதான பொலிஸ் பரிசோதகர் விக்ரமசிங்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைத்தடிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாவகச்சேரி பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நூறு கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும், இதன் போது 33, 32 மற்றும் 26 வயதுகளையுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.