யாழிற்கு 2 இலட்சம் தடுப்பூசிகள்!

வடக்கு மாகாணத்துக்கு 3 இலட்சத்து 75 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அரசின் வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து நேற்று (27) கிடைக்கப்பெற்ற 16 இலட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளிலிருந்து வடக்கின் 4 மாவட்டங்களுக்கு 3 இலட்சத்து 75 தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 2 இலட்சம் தடுப்பூசிகளும், வவுனியா மாவட்டத்துக்கு 75 ஆயிரம் தடுப்பூசிகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டுள்ளன.