இன்று 1,406 பேருக்கு கொவிட் உறுதி!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,406 பேர் இன்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 315,175 ஆக அதிகரித்துள்ளது.