யாழில் காதலர் தினத்தினை முன்னிட்டு களைகட்டும் காதலர் தின வியாபாரம்!

காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காதலர்கள் ஆர்வத்துடன் காதலர் தின பொருட்களை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

யாழ்.  மாநகர கட்டிட பகுதி மற்றும் கடைத்தெருகளிலும் வியாபாரம் களைகட்டியுள்ளது.

காதலர்கள் வாழ்த்து மட்டைகள், ரோஜா பூங்கொத்துகள் மற்றும் வண்ண பொம்மைகளை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்குவதைக் காணலாம்.

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக காதலர் தினத்தை கொண்டாட முடியாமல் காதலர்கள் தவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட காதலர்கள் தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது.