மட்டக்களப்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் !

இந்துக்களின் மிக முக்கியமான மற்றும் அதிசயமானதாகக் கருதப்படும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையின் கிழக்கிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகாழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள், வழிபாடுகள் மற்றும் மஹா யாகங்கள் நடைபெற்று வருகின்றன.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டில் நிலவும் மோசமான சூழல்களை நீக்கி, உலகையே பாதிக்கும் இயற்கை சீற்றங்களில் இருந்து நாட்டையும், அரசையும் காக்க கோவிலில் மந்திரிகல்ப மகா யாகம் நடத்தப்பட்டது.

யாகத்தின் இறுதி நாளான இன்று (18.02.2023) காலை மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் மற்றும் மகா யாகம் நடைபெற்றது.

ஆலய குருக்கள் சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மகா யாகம் இன்று 108க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு மந்திரிகல்ப மகா யாகம் நடைபெற்றது.

மூலமூர்த்தி மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதையடுத்து, கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

அடியார்களுக்கு மூலிகைகளால் மந்திரிகல்ப மகா யாகம் நடத்தவும் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

யாகத்தைத் தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.