இன்றைய ராசிபலன்22.02.2023

மேஷம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம்  சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்‌ வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் அவர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்

மிதுனம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கவனமாக  செயல்படுவது நல்லது. திடீர்‌ திருப்பம் நிறைந்த நாள்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். உறவினர் முன்கோபத்தால் பகைஉண்டாகும். ‌வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும் உத்தியோகத்தில் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவீர்கள்.  சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி: மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகரிகளிடம் செல்வாக்கு கூடும்‌. அமோகமான நாள்.

விருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்த வர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

தனுசு: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதுவேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்: கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிதாக ஆடை ஆபரணம் வாங்குவீர்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் வியாபாரத்தில் ஏற்பட்ட  இழப்புகளை சரி செய்வீர்கள் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண்விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.