தங்கத்தின் விலையில் இறக்கம்

  மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் சென்னையில்    தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கவிலை அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5,605 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் 4,591 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,728 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleஅபுதாபியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு!
Next articleஇன்றைய ராசிபலன்27.05.2023