யாழ் நைனாதீவு அம்மன் சிலைக்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது கல் வீசியவருக்கு நேர்ந்த கதி!

யாழ். பண்ணை நாகபூசணி அம்மன் சிலைக்கு அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்ணை பகுதியில் பொலிஸாரின் காவலரன் உள்ள கூடாரத்தின் கண்ணாடிகள் மீது நேற்றிரவு (27-05-2023) இனம் தெரியாத நபரொருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு, கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தான் மது போதையிலையே கல் வீசினேன் என தெரிவித்துள்ளார்.

அந்நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Previous articleகனடா பல்கலைக்கழகமொன்றில் ரத்து செய்யப்படும் கட்டணங்கள்
Next articleஇன்றைய ராசிபலன்29.05.2023