அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்ட புத்தர் சிலை!

  இமதுவ – அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கண்ணாடியை உடைத்து புத்தர் சிலையை உடைத்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.  

Previous articleநாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
Next articleயாழில் இருந்து கதிர்காமக யாத்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!