உடற் தொப்பையை குறைக்க வேண்டுமா?இதனை மட்டும் செய்து பாருங்கள்

உலகளவில் சுமார் 2 மில்லியன் மக்கள் உடல் பருமன் அல்லது தொப்பையால் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் எடை அதிகரித்தாலோ அல்லது தொப்பை வர ஆரம்பித்தாலோ உடனே அதை குறைக்க மற்றும் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஏற்படும் ஆபத்து

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும். உடல் பருமன் அல்லது தொப்பையால் அவதிப்படுபவரானால் கோடைக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில் மற்ற காலங்களை விட கோடையில் உடல் எடை சற்று வேகமாக குறையும். அதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க வெறும் உடற்பயிற்சிகள் மட்டும் உதவாது. உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் பானங்களும் பெரிதும் உதவி புரியும்.

கோடையில் உடல் சூடு அதிகமாகும் வாய்ப்புள்ளதால் அந்த உடல் சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், பானை போன்று வீங்கியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவும் 3 அற்புதமான பானங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றி குடித்தால் தொப்பையை வேகமாக குறைக்கலாம்.

எலுமிச்சை மற்றும் இஞ்சி நீர்

எலுமிச்சை மற்றும் இஞ்சி உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றுவதில் சிறந்தவை. இந்த இரண்டையும் கொண்டு தயாரிக்கும் பானம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தொப்பையை வேகமாக குறைக்க உதவி புரியும்.

அதற்கு 2 எலுமிச்சை எடுத்து, அவற்றில் இருந்து சாற்றினைப் பிழிந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் எலுமிச்சையின் தோசை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1 இன்ச் இஞ்சியைத் தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அது குளிர்ந்ததும் அவற்றை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி புரிந்து, உடலில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவுகிறது.

வேண்டுமானால் இந்த பானத்தை தயாரித்து தினமும் குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

சீரகம் மற்றும் பட்டை நீர்

சீரகம் மற்றும் பட்டை ஆகிய இரண்டுமே கொழுப்புக்களை கரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டையும் கொண்டு ஒரு பானத்தை தயாரித்து குடித்து வந்தால், தொப்பையை சீக்கிரம் காணாமல் போக வைக்கலாம்.

அதற்கு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் சீரகத்தை எடுத்து, அத்துடன் 3 இன்ச் பட்டையையும் எடுத்து, 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பானமானது குளிர்ந்ததும் அதை வடிகட்டி அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்

எலுமிச்சை சியா நீர்

சியா விதைகள் குளிர்ச்சி பண்புகளைக் கொண்டதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அப்படிப்பட்ட சியா விதைகளை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து உட்கொண்டால், அது சிறப்பான பலனைத் தரும்.

அதற்கு ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் சியா விதைகளை எடுத்து அத்துடன் 1 கப் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து அதில் 2 கப் நீரை ஊற்றி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் தொப்பை குறுகிய நாட்களிலேயே காணாமல் போகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பானங்களும் அசிங்கமாக காணப்படும் தொப்பையைக் குறைக்க உதவுவதோடு கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவி புரியும். எனவே ஸ்லிம்மாக விரும்பினால் இந்த பானங்களுள் ஒன்றை தினமும் குடித்து வாருங்கள்.