யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாகும் நடைமுறை!

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் வாசிப்புமானி பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக இன்று இடம்பெற்று வரும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த மீற்றர் வாசிப்பு மானியைப் பொருத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தரிப்பிடங்களில் தனது முச்சக்கரவண்டிகளை நிறுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மீற்றர் மானி பொருத்துவதற்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வசதி காணப்பட்டாலும் எரிபொருள் விலைகளின் அதிகரித்த விலையால் அத் தொகைகளை செலுத்துவதற்கான தவணையை நீடிக்க சாதகமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.