யாழில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் மீண்டும் மக்கள் பெற்றோலிற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி எரிபொருளின் விலை புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதுடன், மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை முதல் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் வரிசைகளில் பெற்றோலை பெற்று கொள்வதற்காக காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.