யாழ் பல்கலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

அம்பாறை- திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் நேற்றையதினம் அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழத நிலையில் கடவுளின் பெயரை காரணம் காட்டி சில ஈவிரக்கம் அற்ற சிலரால் தந்தையை இறுதியாக சில நிமிடங்கள் மட்டுமே கண்டு கதறித்துடித்த சம்பவம் பல்லரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.சி.கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரனே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்றுவந்த அவரது மகள் தந்தையின் உடலை வெறும் ஐந்து நிமிடங்களே பார்க்கவிட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் முகநூலில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது,

மனதை ரணமாக்கிய இழப்பு
மனதை ரணமாக்கிய முகநூல் சகோதரிக்கு நடந்தேறிய இழப்பு!

தம்பிலுவில் பிரதேசத்தில் இன்றைய தினம் யானை தாக்கி உயிரிழந்த தந்தையின் மரணச்செய்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வியை கற்றுக்கொண்டிருக்கும் மகளின் காதுகளுக்கு பேரிடியாக செல்கின்றது.

அத்துடன் மற்றுமொரு இடியாக ஊரில் கோயில் கதவு திறக்கப்பட்டுள்ளதால் உடனடியாக இன்று மாலை 4:00 மணிக்கே உடலை நல்லடக்கம் செய்யவேண்டும் என்றும் கடவுளின் பெயரை காரணம் காட்டி சில ஈவிரக்கம் அற்ற மனித சாயலில் அலையும் மனிதமற்ற சிலரால் சொல்லப்படுகின்றது.

செய்வதறியாது தவித்த அந்த மகள் நண்பர்களின் உதவியுடன் தேடி ஒருவழியாக car ஒன்றை ஏற்பாடு பண்ணி யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படுவதற்கே ஓரிரு மணித்தியாலங்கள் தாமதமாகிவிட்டது.

தந்தை இறந்த வலியுடன் சேர்ந்து இறுதியாக தனது தந்தையின் முகத்தைக்கூட பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்துடனும் அழுகையுடனும் பயணம் தொடர்கிறது.

குறித்த பயண தூரமும் நேரமும் அந்த மகளுக்கு விபரிக்கமுடியாத வேதனையை கொடுத்திருக்கும் என எண்ணிப்பாருங்கள். அங்கே கடவுளின் பெயரை காரணம் காட்டி உடலை உடனடியாக எடுத்துவிடச்சொல்லும் தான் பிறந்து வாழ்ந்த ஊரவர்களும் நிர்வாகத்தினரும், இங்கே தன்னுயிரை துச்சமென எண்ணி குறித்த மகளினது வேதனையையும் சூழ்நிலையையும் அறிந்தவனாக அதிவேகத்துடன் சென்ற வெளியூர் சாரதி.

இங்கு யார் கடவுள்?
இங்கு யார் கடவுள் என்பதை எண்ணிப்பாருங்கள் புரியும். இறுதியாக ஊரவரும் நிர்வாகத்தினரும் கெடு கொடுத்த காலத்திலிருந்து 1 மணிநேரம் தாமதமாக சென்ற மகள் மயானத்தில் தன் தந்தையை பார்த்தது வெறும் 5 நிமிடங்களே.

6 மாதங்களுக்கு முன்னர் நேரில் சிரித்த முகத்துடன் பார்த்த தந்தையை 6 மாதங்களின் பின்னர் மூச்சடங்கிய உடலாக கடவுளின் பெயரைக்காரணம் காட்டி வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பார்க்க வைத்த வேதனை இனி யாருக்கும் எங்குமே நடந்துவிடக்கூடாது.

இதைத்தாண்டி, குடும்பத்தின் இரு பிள்ளைகளில் கடைசி மகன் ஓரிரு வாரங்களின் முன்னரே தொழில் நிமிர்த்தம் வெளிநாட்டிற்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மகனது வேதனையை இந்த ஜந்தறிவு ஜீவன்களால் உணரமுடியுமா??? கடவுளை காரணமாக்கி இரு பெற்ற பிள்ளைகளது வாழ்நாள் மனவேதனைக்கு காரணமாகிய ஆலய நிர்வாகத்தினரும் ஊரவர்களும், ஏன் இப்படியான சமூகத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாமும் வெட்கித்தலை குனிய வேண்டியவர்களே.

உங்களது வரட்டு கௌரவத்தையும்; சாதிப்பெருமைகளையும் பறைசாற்ற நடாத்தும் திருவிழாவுக்காக இரு பாசமிகு பிள்ளைகளின் வாழ்நாள் வேதனைக்கும் காரணமாகிவிட்டீர்களே. அனைத்து மதங்களும் போதிப்பது மனிதத்தை மட்டுமே.

அதை முன்னிலைப்படுத்தினாலே போதும் கடவுள் மனிதர்களை எண்ணி திருப்தியடைவார். மனிதத்தை புதைத்து நீ கடவுளுக்காக என்ன செய்தாலும் உன் பாவக்கணக்கிலேயே வந்துசேரும் என்பதை மறக்காதே. இந்த விடயத்தில் குறைந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கிய யாராகினும் அந்த கடவுள் கூட உங்களை மன்னிக்கமாட்டார்.

குறித்த சகோதரியினதும் சகோதரனினதும் இழப்பை ஈடு செய்ய எந்த கடவுளினாலும் முடியாது என்பதே யதார்த்த உண்மை. இந்த சமூகத்தில் நானும் ஒருவனாக சிரம்தாழ்த்துகின்றேன் தந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

Previous articleபாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
Next articleகையடக்க தொலைபேசிகளின் விலை குறைவடைகின்றதா?