தளர்த்தப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், 300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வங்கிகளின் வட்டி வீதம்
இதேவேளை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் வட்டி வீதத்தை சுமார் 2.5 வீதத்தால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இலங்கை மத்திய வங்கி நேற்று (01.06.2023) காலை கொள்கை வீதங்களை தளர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.