வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை தேடுபவர்களுக்கான முக்கிய செய்தி!

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு பொலிஸ் அறிக்கைகளை வழங்குவதில் தளர்வான கொள்கையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் போது பெறப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கையில் தவறுகள் மற்றும் சிறு குற்றங்களை உள்ளடக்குவதிலும் அதே தளர்வான கொள்கையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரிய வேலைகளுக்காகவும், வேறு நாடுகளுக்கு வேலைக்காகவும் செல்லும் தொழிலாளர்களின் பொலிஸ் அறிக்கையில் சிறு குற்றங்கள் செய்து விடுக்கப்பட்ட தகவல்கள் உள்ளக்கப்படுகின்றது.

அவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படுவதனால் தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.