கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கைது!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

கைது செய்யப்பட்டமை

அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.

இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.