இலங்கையில் கரையொதுங்கும் வெளிநாட்டு பிளாஸ்டிக் கழிவுகள்

 இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சீனா, இந்தியா, பங்களாதேக்ஷ், மலேசியா உட்பட ஏழுநாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இவ்வாறு இலங்கையில் கரையொதுங்கியுள்ளன.

இலங்கை சீன கருத்தரங்கு

பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை சீன கருத்தரங்கில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ருகுணு பல்கலைகழகத்தின் கலாநிதிடேர்னி பிரதிப்குமார இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் கடற்கரைகளில் 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு பல நாடுகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் இதில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதனை தடுப்பதற்கு சர்வதேச அளவிலான செயற்பாடுகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.