பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ஹிக்கடுவையில் இராணுவ பஸ்ஸுடன் வேன் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் கரந்தன இராணுவ முகாமிற்குச் சொந்தமான பேருந்து ஒன்று பிரித்தானிய பிரஜை ஓட்டிச் சென்ற வேன் ஒன்றின் மீது மோதியுள்ளது.

வேனை ஓட்டிச் சென்ற 70 வயதுடைய பிரித்தானிய முதியவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.