யாழில் வீதியில் சாகசம் காட்டிய இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

 யாழில் போக்குவரத்து நிறைந்த வீதியில் சாகசம் காட்டிய இளைஞனைவிளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சன நடமாட்டம் அதிகமான நேரத்தில் வீதியில் வேகமாக வாகனத்தினை செலுத்தி , சாகசம் காட்டியதுடன் , வீதியில் போத்தல் ஒன்றையும் உடைத்துள்ளார்.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனை கைது செய்தனர்.

கைதான இளைஞனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleகைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் பிணையில் செல்ல அனுமதி
Next articleஇன்றைய ராசிபலன்08.06.2023