கிளிநொச்சியில் திருமணம் முடித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு ! வெளியான காரணம் !

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த குறித்த மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவி சிறு வயதில் திருமணம் செய்து கல்வியை தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் மாணவி உயிரிழந்த நிலையில் இச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.