யாழில் உயிரிழந்த இளம் பூசகர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகர் ஒருவரே இவ்வாறு  இன்றைய தினம் (08-06-2023) உயிரிழந்துள்ளார்.

குறித்த பூசகர் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.  

Previous articleஇன்றைய ராசிபலன்09.06.2023
Next articleஅவுஸ்ரேலியாவில் இருந்து வந்த முதியவரிடம் மோசடியில் ஈடுபட்ட கிளிநொச்சி யுவதி கைது!