மட்டக்களப்பில் பேத்தை மீனை உண்டமையால் இளம் தாய் உயிரிழப்பு! மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

  மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில்மீன் குழம்பு விசமானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மூவர் மருத்துவமனையில்

குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியுள்ளனர்.

இதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் 27 வயதுடைய இளம் தாயார் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.  

Previous articleலங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
Next articleயாழ் நல்லூரில் முரண்பாட்டிற்கு உட்ப்பட்ட ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!