பலரின் அதிஷ்ட விலங்காக மாறிவரும் அல்பினோ முதலை!

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் அதிஷ்டம் தரும் முதலையாக அல்பினோ முதலையின் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.

உலகம் முழுவதும் ஏராளமான முதலைகள் உள்ளன. அவற்றில் மிக அரிய வகை முதலையாக காணப்படுவது இந்த அல்பினோ முதனையாகும்.

இது 100 தொடக்கம் 200 வரை எண்ணிக்கையிலே காணப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் Dre Ennis எனும் முகப்புத்தக பயனாளி அல்பினோ முதலையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொறு முறையும் இது பகிரப்படும் போது அதிஷ்டம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே இதனைதொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற்று வரும் நிலையில் அல்பினோ முதலையின் படம் முகபுத்தகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சிலர் சமூகவலைத்தளங்களில் இந்த முதலையின் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கு என்ன வேண்டும் என்பதை வேண்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.