பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஜஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் நேற்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் காத்தான்குடி டீன் வீதி, ஜவ்பர் ஆலிம் வீதியில் குறித்த வியாபாரி ஐஸ் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5850 மில்லி கிராம் மற்றும் 19000.00 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த நபர் ஏற்கனவே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை வழங்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என குறிப்பிட்டார்.

இந்நிலையில் காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலின் கீழ் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தலைமையிலான காவல்துறை குழுவினரே இச்சுற்றிளைப்பினை மேற்கொண்டனர்.

இதில் கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.