இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 40, 39 மற்றும் 13 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.