கனடாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்!

கனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் பாலமொன்ற திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.

நோவா ஸ்கோட்டியாவின் கொல்செஸ்டர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலம் இடிந்து வீழ்ந்த காரணத்தினால் அந்தப் பகுதிக்கான போக்குவரத்து கால வரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் ட்ராவுட் புருக் அல்லது கூப்பர் வீதியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

பாலத்தில் பயணம் செய்த ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாலம் இடிந்த வீழ்ந்தமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.