இலங்கை பொலிஸ் நிலையங்களில் மரணங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பொலிஸ் நிலையங்களில் மரணங்கள் அதிகரிப்பது குறித்தும் நாட்டில் பரவலாக குற்றச்செயல்கள்அதிகரிப்பதுகுறித்தும்  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டு;ள்ளது.

அரசாங்கம் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் தங்கள் கடமையை நிறைவேற்றதவறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சட்டத்தின் ஆட்சியின் கீழ் நாகரீகசமூகமொன்றில் இடம்பெறக்கூடிய மிகமோசமான குற்றம் என கருதப்படும் பொலிஸ்நிலையங்களில் இடம்பெறும் மரணங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய வழிகாட்டுதல்களை உருவாக்கவேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பதற்காக குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் அமுல்படுத்தவேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை சட்ட அமைப்பு முறையான விசாரணை மற்றும் தண்டனையை வழங்குவதற்கான விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிப்படையானது என தெரிவித்துள்ள  இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் அத்தகைய செயல்முறைகளின் நம்பகதன்மையை வெளிப்படைதன்மையை  உறுதியாக பாதுகாக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.