யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அமைச்சர் குலாம் ஒன்றும் யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக பரீட்சாத்தமாக சென்னையில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.