17 வயதான பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடப்போவதாக அச்சுறுத்திய இராணுவ சிப்பாய்!

  17 வயதான பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய, இராணுவ சிப்பாய் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ சிப்பாய் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பணிபுரியும் மின்னேரிய இராணுவ முகாமின் மூன்றாவது பொறியியல் சேவை தலைமையகத்துக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரான இராணுவ சிப்பாயைக் கைது செய்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தது.

கைதான இராணுவ சிப்பாய் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.