யாழில் தனிமையில் இருந்த சிறுமியுடன் பாலியல் சேட்டை புரிந்த 30 வயது நபர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவரது மகளுக்கே இவ்வாறு பாலியல் தொந்தரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்தபோது, குறித்த சந்தேகநபர் சிறுமியின் ஆடைகளை முற்பட்டுள்ளார். இதனை சிறுமியின் தாயார் அவதானித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.