யாழில் இரு பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

  யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட  மாணவிகள் இருவரில் ஒருவர் யாழ்.கோட்டைப் பகுதியில் வைத்து பாடசாலை சீருடையுடன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை மற்றைய மாணவி வெளிமாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த நிலையில் வெளிமாவட்டத்தில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமக்கு தெரியாதென கையை விரித்த அதிகாரிகள்

இரு மாணவிகளில் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை   மாணவிகள் கல்வி பயிலும் பாடசாலைகள் அமைந்துள்ள வலயங்களுக்கு பொறுப்பான வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,   சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என பதிலளித்தனர்.   

இந்நிலையில்  யாழில் அண்மைகாலங்களாக  குற்றச்செயல்களும், சமூக பிறழ்வான நடத்தைகளும் அதிகரித்துள்ள நிலையில்  பெற்றோர்கள்  தமது பிள்ளைகள்   தொடர்பில்  அதீத கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒருவேளை அவர்கள் கவனிக்க தவறினால் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமென்பது கேள்விக்குறியே.