பிரான்சில் சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

பிரான்ஸில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதுவரம்பை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வயதுவரம்பை 17 ஆக குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுவரை 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், விரைவில் இந்த வயதுக்குறைப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வந்த நிலையில், விரைவில் பிரதமர் Élisabeth Borne இது தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பகுதி நேர அல்லது முழுநேர வேலைவாய்ப்பினை தேடும் இளைஞர் யுவதிகளுக்கு இந்த வயதுக்குறைப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.