யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பலரையும் வியக்க வைத்த நாகபாம்புகள்

  வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.

நாகவடிவில்  காட்சி கொடுத்த அம்பாள்

இந்நிலையில் ஆலய திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மனை நாடிவந்த நாகங்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்து சென்றுள்ளமை அன்னையின் அருளை எடுத்தியம்பி நிற்கின்றது.