யாழில் சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர் ! வெளியான காரணம் !

யாழ். நகரப்பகுதியில் உள்ள பழக்கடையில் மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு அங்கிருந்தவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இந்நிலையில் கைது செய்ய முற்பட்ட போது மதுபோதையில் இருந்த அந்த இரு நபர்களும் தப்பியோட முற்பட்டதுடன், பொலிஸாருடன் தகராற்றில் ஈடுபட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.