கிளிநொச்சி இராணுவ முகாமில் தீப்பரவல்!

கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.