இன்றைய ராசிபலன்19.06.2023

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. இளைய சகோதரரால் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்

ரிஷப ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். வாழ்க்கைத்துணை கேட்டதை வாங்கித் தருவீர்கள். செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்கள் வகையில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபட நன்மை ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனு கூலம் உண்டாகும். பேச்சால் வீண் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் பேசும் போது பொறுமை அவசியம். மாலையில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்கை வழிபாடு மகிழ்ச்சி தரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வெளியில் செல்வதை கூடுமானவரை தவிர்க்க வும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார் கள். பணியாளர்கள் பரபரப்பாகச் செயல்படுவர். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தொடங்கிய காரியம் அனுகூலமாகும். புதிய முயற்சிகளைத் தொடங்க உகந்த நாள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுக மும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சிவபெருமான் வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். விற்பனை வழக்கம் போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செல வுகளால் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதல் தரும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனம் செலுத்தவும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன் றில் வாழ்க்கைத்துணை உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு வருவார். பிற்பகலுக்குமேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று ஆஞ்சநேயரை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்,
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

மகர ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். அம்பிகையை வழிபட இடையூறுகள் விலகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கும்பராசி அன்பர்களே!

முக்கிய முடிவுகள் எடுப்பதில் பதற்றம் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. செரிமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். இன்று விநாயகரை வழிபட நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுத லாகக் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்