கொழும்பில் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த பெண் கைது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த பெண்ணொருவர் இரண்டு தேசிய அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கிண்ணியா – குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஆவார்.

இரண்டு அடையாள அட்டைகள்

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற நபர்களை பொலிஸார் சோதனையிட்ட போது, சந்தேக நபரிடம் இருந்து இந்த இரண்டு அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.