நண்பர்கள் முன்னிலையில் கணவனை மனைவி திட்டியதால் நிகழ்ந்த சோகம்!

புதுக்குடியிருப்பு பகுதியில் நண்பர்கள் முன்னிலையில் மனைவி குற்றம் சாட்டியதால் மனமுடைந்த 24 வயது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக்கக்கொண்டுள்ள குறித்த கணவன், நேற்று இவர் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த இருந்த போது நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞரை அவரது மனைவி திட்டி விரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.